சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் ஆழமான தியானத்தில் ஈடுபடுபவராக இருப்பார். 

சிலர் கதாசிரியர்களாக இருப்பார்கள். சிலர் மலைப் பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்வார்கள். சிலர் நிறைய கோவில்களுக்குப் புனிதப் பயணம் செய்வார்கள். சிலர் கதை, கவிதைகள் மூலம் தன் எண்ணங்களை மற்றவர்களுக்குக் கூறுவார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். இளம்வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். 28 வயதிற்குப்பிறகு, பணம், பெயர், புகழ் ஆகியவை இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் தொழிற்சாலை நடத்துபவராக இருப்பார். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். வாரிசுகள் சந்தோஷத்தைத் தருவார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். துணிச்சல் உள்ளவராக இருப்பார். சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார் கள். அதில் பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் அரசு பதவிகளில் இருப்பார் கள். சிலர் அரசிய-ல் இருப்பார்கள்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அவ்வப்போது சிறிய அளவில் விபத்துகள் நடக்கும். தைரிய குணம் இருக்கும். அதிக பயணங்கள் இருக்கும். சிலர் வெளிநாட்டிற்குப் பயணிப் பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். கோபம் அதிகமாக வரும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

பலருக்கு வேலை தருவார்கள். பெயர், புகழ் இருக்கும். 

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். தலைவ- இருக்கும். வயிற்று வ- வரும். 32 வயதிற்குப்பிறகு, பெயர், புகழ், பண வசதி இருக்கும்.

 சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத் தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் வெளியூரில் தொழில் செய்து, பணம் சம்பாதிப்பார்கள். பல தொழில்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலருக்கு வேறு பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் தியானத்தில் ஈடுபடுவார்கள். நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். துணிச்சல் குணம் இருக்கும். பல கஷ்டங்களைத் தாண்டி, வெற்றி கிடைக்கும். சிலர் வைத்தியர்களாக இருப் பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். நல்ல பண வரவு இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சிலர் சிறந்த சிந்தனையாளராக இருப்பார்கள். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் யாருக்காவது மன நோய் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். தலைவ- வரும்.

செல்: 98401 11534